நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி என்னைப் புதிய உயிராக்கி -எனக்கேதுங் கவலையறச் செய்து -மதிதன்னை மிகத் தெளிவு செய்து -என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
- மகாகவிஞன்.



Saturday, September 4, 2010

பர்வதமலை-பயணம்-அதிசியம்


என் பயணம் ஒரு திடீர் முடிவு. அது ஒரு ஆடி அம்மாவாசை.


வழிதடம் : சென்னை == போளூர்==பர்வதமலை .
படிக்கட்டு பாதை**பாறை பாதை**ஏணி பாதை .


மதியம் தொடங்கினேன். இயல்பாக தோடங்கிய பயணம் மிகவும் கடினமாக இருந்தது .

உடலை பிழிந்த பயணம்.எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் , உடலை வருத்தி தான் மேலே செல்ல முடியும்.

இறைவனை நோக்கிய எண்ணத்துடன் மேலே சென்றேன்.

அதன் வழி,சூழல்,அமைப்பு ஆகியவை அது சித்தர்கள் இருப்பிடம் என்று உணர்த்துகிறது. நாமும் ஒரு சித்தனாக மாறினால் மட்டுமே அந்த சித்த லிங்கத்தை தரிசிக்க முடியும் .

பல மணி நேரம் லிங்கத்தின் அருகில் தியானம் செய்தேன்.

பிறகு வெளியே அமர்ந்து இருக்கையில் ,திடீர் என்று பெரிய லிங்க வடிவில் ஓளி. சில நொடிகள் மட்டுமே அந்த தரிசனம் . அப்படியே கீழ இறங்கியது அந்த ஓளி வடியும் . எதிர் பாராத காட்சி தருவது அவனின் இயல்பு.

பூரித்து போனேன் ! இப் பிறவி பலனை நான் அடைந்துவிட்டேன் ,அந்த மல்லிகார்ஜுனஸ்வரேர் அருளலால் .


இது ஒரு சித்த பூமி !

ஓம் நமசிவாயம் !

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி நட்பே ! பயண நேரம் ,வழி,மிருகங்கள் உள்ளதா? போன்ற விபரங்களுடன் விரிவாக எழுதினால் பயனாக இருக்குமே.? www.kavithaimathesu.blogspot.com

    ReplyDelete