1. நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.
2. சூரிய உதயத்திற்கு முன்னே காலை வேளை மனதிற்கு மிகமிக நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய்தாலும் நல்ல பலன் உண்டு.
3. யோகா செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும்.. எழுந்தவுடன் நிறைய குளிர் தண்ணீர் குடித்துவிட்டு அரைமணி நேரம் கழித்து காலைக்கடனை முடித்துவிட்டு செய்யலாம்.
4. வெறும் தரையில் செய்யக்கூடாது. தரையில் நல்ல மென்மையான விரிப்பை விரித்து அதன் மேல் செய்ய வேண்டும்.
5. வியர்வை அதிகம் வராது ஆதலால் உடை எந்த உடை ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகம் இறுக்காமல் தளர்ச்சியான மற்றும் யோகா செய்வதற்கு எளிதான உடை உடுத்திக்கொள்ளவும்.
6. அவசர அவரசமாக செய்யக்கூடாது. மிக நிதானமாகவே செய்ய வேண்டும். அவரச வேலைகள் இருப்பினும் நிதானமாகவே குறைந்த நேரம் மிக முக்கிய ஆசனங்களை மட்டுமாவது செய்தால் மற்ற வேலைகளை சிறப்பாக செய்ய உத்வேகம் கிடைக்கும்.
7. தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்கக்கூடாது. பழக பழக வந்துவிடும்.
8. யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி ( மூச்சுப் பயிற்சி ) செய்து கொள்ளவும்.
9. ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து விட்டு அடுத்த ஆசனத்தை தொடரலாம்.
10. தியானம் செய்த பின் எவ்வாறு சாந்தியோகம் முக்கியமோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கியமாக செய்யவும்.
11. யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய்யக்கூடாது. காலை சூரிய ஒளி பட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.
12. சில முக்கிய ஆசனங்கள் அதிக நேரம் பயிலக்கூடாது.
13. பக்கத்தில் சுவர் அல்லது தூண் இருந்தால் அதன் துணையுடன் சிரசாசனம் செய்யலாம்.
14. செய்து முடித்தபின் கடின உணவானால் அரை மணி நேரம் கழித்தும் நீர் ஆகாரம் 15 நிமிடம் கழித்தும் உட்கொள்ளலாம்
15. மது, புகை, டீ, காப்பி, அதிக காரம் உப்பு புளி, அசைவம் இவற்றை தவிர்க்கவும். உடனே விட்டுவிடவேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தால் போதுமானது.
16. உடல் நோய் இருப்பின் அந்த நோய்க்கான யோகப்பயிற்சியை அதிக முனைப்புடன் செய்யவும்.
17. மூளையை அதிகம் உபயோகித்து வேலை செய்பவர்கள் சிரசாசனம், யோகமுத்ரா போன்ற ஆசனங்களை கொஞ்சம் அதிக நேரம் செய்தால் மூளை சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்கும்.
18. ரொம்ப நேரம் கண்விழித்து வேலை செய்தவர்கள் 1 நிமிடம் சிரசாசனம் செய்துவிட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.
19. இரவில் தூக்கம் வராதவர்கள் குளித்துவிட்டு யோகநித்திரை பயிற்சியை மேற்கொள்ளலாம்.
20. பெண்கள் மாதவிடாய் காலங்களில் யோகாசனம் செய்ய வேண்டாம். தியானம் செய்வதற்கு தடை இல்லை.
21. அதிக தலைவலி இருப்பின் யோகாசனம் செய்வதை தவிர்த்து சவாசனம் மற்றும் யோகநித்திரை செய்யவும்
22. உடனே எழுந்து வேற வேலைகளுக்கு செல்ல வேண்டியவர்கள் சவாசனம் முழுவிழிப்புடன் செய்யவேண்டும். தூங்கிவிட வாய்ப்புள்ளது.
23. யோகாசனம் கூறப்பட்ட அதே முறைப்படி செய்தால்தான் பலன் கிடைக்கும் என்றில்லை. எந்த அளவு செய்கிறோமோ அந்த அளவு பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
24. யோகாசனம் செய்யும் போது மனதில் கோபம், பொறாமை, கவலை இவற்றை அறவே ஒழித்துவிட்டு நல்ல தன்னம்பிக்கை எண்ணங்களை, சாதிக்க வேண்டியவைகளை நினைவுகூறலாம்.. அல்லது அமைதியான இசையை கேட்கலாம்..
25. யோகாசனத்தை செய்வோர்கள் ஒரே காலகட்டங்களில் கடின உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யக்கூடாது. யோகா செய்து உடல் வளையும் தன்மை கொண்டிருக்கும் நேரத்தில் கடின உடற்பயிற்சி செய்தால் உடல் சுழுக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
26. ஒவ்வொரு ஆசனத்திற்குமான மாற்று ஆசனம் செய்தால் அந்த ஆசத்திற்கான முழு பலன் கிடைக்கும்
27. கடினமான ஆசனங்களை ஆசிரியர் உதவியுடன் மட்டும் செய்யவும்.
28. யோகாசனம் மனித உடலுக்கும் உள்ளத்திற்குமானது. இதில் மதப்பாகுபாடு கூடாது.
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
ReplyDeleteநாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/embed/y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/embed/FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409