நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி என்னைப் புதிய உயிராக்கி -எனக்கேதுங் கவலையறச் செய்து -மதிதன்னை மிகத் தெளிவு செய்து -என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
- மகாகவிஞன்.



Friday, March 1, 2013

சித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்

சித்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமா?
 
இதோ சுலப வழி

இது 90 நாட்கள் தொடர்பயிற்சி...
 

தேவையானவை:

குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை
ஒரு குத்துவிளக்கு அல்லது சிறிய தீபம் எரியும்
கிண்ணம் அதாவது கிளிஞ்சட்டி
தாமரை நூல் திரி மற்றும் சுத்தமான பசு நெய்
(பாக்கெட் நெய் வேண்டாம்).ஒரு காசி சொம்பு,
சுத்தமான நீர்.(வீட்டில் நிறைகுடத்திலிருந்து தினமும்
தண்ணீர் முதலில் எடுக்கவும்).தினமும் சில பழங்கள்.
அமாவாசையன்று ஆரம்பிக்கவும்.இரவு சரியாக 8
மணிக்கு மந்திர ஜபம் ஆரம்பிக்க வேண்டும்.இரவு 9
மணிக்கு முடித்துவிட வேண்டும்.
அகத்தியர் சித்தர்களின் தலைவர்.நந்தீசர்,
திருமூலர்,கொங்கணர்,கோரக்கர்,
புலிப்பாணி, காகபுஜீண்டர் என பல ஆயிரம்
சித்தர்கள் உள்ளனர்.உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ
அந்த சித்தரை-
அவர் உருவம் நமக்கு தெரியாதல்லவா? எனவே அவரது
பெயரை நினைத்துக் கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தை
ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.

ஒம் சிங் ரங் அங் சிங்


இது தான் சித்தர்களை நேரில் வரவைக்கும் மந்திரம்.
ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இந்த மந்திரம்
கூறப்பட்டுள்ளது.

ஜபம் செய்யும் முறை:
அமாவாசையன்று இரவு 8 மணிக்குள் 10 சதுர அடி
உள்ள அறையில் ஒரு விரிப்பு அல்லது பலகையை
கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்கவும்.
அதிலிருந்து 8 அடி தூரத்தில் நமது கண்களுக்கு
நேராக வருமாறு நெய்தீபம் தாமரைநூலில் எரிய
வேண்டும்.அந்த தீபத்தின் முன்பக்கம் காசிச்சொம்பில்
சுத்தமான நீர் நிரப்ப வேண்டும்.அந்த காசிச்சொம்பின்
முன்பக்கமாக பழங்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.
இரவு 8 மணியானதும் அந்த தீபத்தைப் பார்த்தவாறு
நாம் விரும்பும் சித்தர் பெயரை நினைத்துக்கொண்டு
மேலேக் கூறிய மந்திரத்தை உதடு அசையாமல் ஒரு
மணிநேரம் வரை ஜபித்துவரவேண்டும்.இப்படி தினமும்
ஒருமணிநேரம் வீதம் 90 நாட்கள் ஜபித்துவர நமது சித்தர்
நேரில் வருவார்.அவரை குருவாக ஏற்றுக்கொண்டு
நிம்மதியாக வாழவும்.
9 மணியானதும் காசிச்சொம்பில் உள்ள நீரைப்பருகவும்.
படையல் செய்த கனிகளைச் சாப்பிடவும்.இரவில்
பால்சாதம் சாப்பிடவும்.
இந்த 90 நாட்களில் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.
உணவில் உப்பு,காரம்,புளி குறைத்துக்கொண்டால் நல்லது.
இந்த முறையால் பல ஆயிரம் மனிதர்கள் பூமியில்
சித்தர்களை தரிசித்துள்ளனர்.இன்றும் தரிசித்து
வருகின்றனர்.
ஜாதி,மதம்,மொழி கடந்து யாரும் சித்தர்களை தரிசிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட யாரும் முயற்சிக்கலாம்.
வாழ்க வளமுடன்! உயர்க சித்தர்கள் அருளால்!!!
குறிப்பு: இந்த முயற்சி,சித்தர் சந்திப்பை ரகசியமாக
வைத்துக்கொள்வது அவசியம்.தம்பட்டம் அடிக்கக் கூடாது.
உலகில எந்தப்பகுதியில் இருந்தாலும் ,
வாழ்ந்தாலும் அந்தந்தப்பகுதியில்
இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும்.
 

சிவ மந்திரங்கள்

சில சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:
 
ஓம் ஜகங் என தினமும் 108 முறை
ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.

ஓம் நமசிவாய என்று ஜெபித்தால்
காலனை வெல்லலாம்.

ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால்
பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட
தேவதைகள் அழியும்.மன்னர்கள் அருள் கிடைக்கும்.

ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற
மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.
ஆறு சாஸ்திரங்களையும், நான்கு
வேதங்களையும் அறிய உதவும்.

சிவாய ஓம் என்று சொன்னால்
திருமாலின் ஆற்றல் கிட்டும்.

மய நசிவ சுவாகா என ஓதினால்
ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள்
கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.

இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை
தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு
எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி
ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து
முழுமையாக நீங்குவான்.

சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால்
முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.

ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால்
வியாபாரம் நன்றாக நடக்கும்.

லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள்
வசியம் உண்டாகும்.

சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால்
அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
 
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும்
மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி

சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-
நந்தீசர் மகரிஷி